"தக்கால்' டிக்கெட் கட்டணத்தில் குழப்பம்*ரயில் பயணிகள் கடும் பாதிப்பு
"தக்கால்' டிக்கெட் கட்டணத்தில் குழப்பம்*ரயில் பயணிகள் கடும் பாதிப்பு
"தக்கால்' டிக்கெட் கட்டணத்தில் குழப்பம்*ரயில் பயணிகள் கடும் பாதிப்பு
ADDED : செப் 11, 2011 12:44 AM
விழுப்புரம் : ரயில்வே துறை சார்பில், பயணிகள் வசதிக்காக வைத்துள்ள கம்ப்யூட்டரில், 'தக்கால்' சேவை டிக்கெட் முன்பதிவு செய்ய, கட்டணம் விவரம் தெரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது.
ரயில்வே துறை, அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும், பயணிகள் வசதிக்காக கம்ப்யூட்டர் (பாசஞ்சர் ஆபரேட்டர் என்கொயரி மெனு) வைத்துள்ளனர். இந்த கம்ப்யூட்டரில், முதல் வரிசை எண்ணை அழுத்தி, பயணிகள் பயணம் செய்ய வேண்டிய தேதி, ரயில் எண்ணை குறிப்பிட்டால், டிக்கெட் இருப்பு நிலவரம், கட்டணம், ரயில் புறப்படும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும்.தக்கால் சேவையில், அதிகளவு பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதால், கம்ப்யூட்டரில் இரண்டாவது வரிசையில், தக்கால் டிக்கெட் இருப்பு நிலவரமும், ரயில் புறப்படும் நேரமும், கட்டண விவரமும், மூன்றாம் வரிசையில் பி.என்.ஆர்., குறித்த விவரங்கள் தெரிந்து கொள்ளவும், வசதி உள்ளது.தக்கால் டிக்கெட் எடுக்க வருவோருக்கு, கட்டண விவரங்களை பார்த்தால், குழப்பம் ஏற்படுகிறது. வழக்கமாக, பொது முறையில் டிக்கெட் இருப்பு, கட்டண விவரங்களை தெரிவிக்கும் 'கம்ப்யூட்டர் டிஸ்பிளே' யில் வரும் கட்டணமே, தக்கால் டிக்கெட்டிற்கும் வருகிறது. தக்கால் டிக்கெட்களுக்கு அதிக கட்டணம் வர வேண்டும். இரு பிரிவுகளுக்குமே, ஒரே கட்டணம் வருவதால், தக்கால் டிக்கெட் எடுக்க வருவோர், பெரிதும் குழப்பமடைகின்றனர். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கட்டணங்களை மாற்ற வேண்டும்.
மேலும், தக்கால் டிக்கெட் குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு, டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்பதற்குள், தக்கால் டிக்கெட் முன்பதிவு நேரம் முடிந்து விடுகிறது. இந்த சேவையில், ஐந்து தினங்களுக்கு முன், டிக்கெட் பதியும் வசதி இருந்தது. இதை, இரண்டு தினங்களாக மாற்றியதால் பயணிகள் பாதிக்கின்றனர். இரு தினங்களுக்கு முன், அதிகாலை 7 மணிக்கே சென்றால் கூட, டிக்கெட் கிடைப்பதில்லை. காலை 8 மணிக்கு துவங்கும் தக்கால் முன்பதிவு, சில நிமிடங்களில் முடிவதால், பயணிகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. ஏற்கனவே இருந்தது போல், இச்சேவையை மாற்றி அமைக்க, ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.