/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஐந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்ஐந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
ஐந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
ஐந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
ஐந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
ADDED : செப் 22, 2011 12:30 AM
திருவள்ளூர் : மூன்று ஆண்டுகளாக, தொடர்ந்து ஒரே பகுதியில் பணிபுரிந்து வந்த, ஐந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சாரதி, திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆர்.கே.பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அழகுமலை, திருவள்ளூர் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஆர்.கே.பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக அருள்மணி நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோல் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த அப்துல்காதர், சோழவரம் போலீஸ் நிலையத்துக்கும், திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கோகுல்ராஜ், மணிமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இத்தகவலை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் அலுவலகம் வெளியிட்டுள்ளது.