ADDED : ஆக 04, 2011 11:45 PM
காரைக்குடி:சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் குன்றக்குடியில்
நடந்தது. மாநில தலைவர் விஜயபாண்டியன் தலைமை வகித்தார். பொது செயலாளர்
ராஜேந்திரன் வரவேற்றார்.தீர்மானம்: தேர்தல் வாக்குறுதிபடி சத்துணவு
ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல், ஓய்வூதியம் வழங்கவேண்டும் என
தீர்மானித்தனர்.
துணை தலைவர்கள் வேலுச்சாமி, முத்துச்சாமி, அமைப்பு செயலாளர் சாதகன், மாவட்ட
தலைவர் அயோத்தி செயலாளர் முருகேசன், கல்லல் ஒன்றிய தலைவர் சொக்கலிங்கம்
பங்கேற்றனர். மாநில துணை தலைவர் முத்துச்சாமி நன்றி கூறினார்.