/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மறைந்துபோனது மலேரியா தடுப்பு பணிகள் கீழக்கரையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்புமறைந்துபோனது மலேரியா தடுப்பு பணிகள் கீழக்கரையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
மறைந்துபோனது மலேரியா தடுப்பு பணிகள் கீழக்கரையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
மறைந்துபோனது மலேரியா தடுப்பு பணிகள் கீழக்கரையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
மறைந்துபோனது மலேரியா தடுப்பு பணிகள் கீழக்கரையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
ADDED : ஆக 24, 2011 12:15 AM
கீழக்கரை:கீழக்கரையில் மலேரியா தடுப்பு பணிகள் நடக்காததால் காய்ச்சலால்
அவதியடைந்து பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது.
கீழக்கரை தெருக்களில் கரை புரண்டோடும் சாக்கடை, தேங்கி கிடக்கும் குப்பை
குவியல்களால் சுகாதாரக்கேடு அவலம் பல ஆண்டுகளாகியும் அகலவில்லை. இங்குள்ள
மலேரியா மையம் பெயரளவில் தான் உள்ளதே தவிர, சுகாதார பணி நடப்பதில்லை.
மலேரியா, சிக்-குன் குனியா நோய் பாதிப்பில் மக்கள் அவதியடைந்து
வருகின்றனர்.
ரத்த தடவல் சேகரிப்பு, கிணறுகளில் 'அபேட்' மருந்து தெளிப்பு, புகை மருந்து
அடித்தல் உட்பட எவ்வித பணிகளையும் மேற்காள்வது கிடையாது. உயர் அதிகாரிகளும்
ஆய்வு பணிகள் மேற்கொள்வதில்லை.கொசுக்களை புழு நிலையில் சாப்பிட்டு,கொசு
உற்பத்தியை கட்டுப்படுத்தும் கம்பூசியா மீன்கள் கிணறு, குளங்களில் விடுவது
கிடையாது. மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பும்
நோயாளிகளுக்கு கொசுவலை வழங்குவதில்லை. மக்கள் நல பாதுகாப்புகழக செயலாளர்
முகைதீன் இபுராகிம் கூறியதாவது: நகராட்சி தரப்பில் முறையாக குப்பைகளை
அப்புறப்படுத்துவதில்லை. வாறுகால் சீரமைப்பதில்லை. மழை காலத்தில்
கால்நடைகளுக்கும் இதுபோன்ற சூழல் ஏற்பட்டு வருகிறது.மழை காலம்
துவங்குவதற்கு முன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என்றார்.


