Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நாளிதழ்களை படிக்கும் பழக்கம் தேவை கலெக்டர் அருண்ராய்

நாளிதழ்களை படிக்கும் பழக்கம் தேவை கலெக்டர் அருண்ராய்

நாளிதழ்களை படிக்கும் பழக்கம் தேவை கலெக்டர் அருண்ராய்

நாளிதழ்களை படிக்கும் பழக்கம் தேவை கலெக்டர் அருண்ராய்

ADDED : ஆக 21, 2011 11:54 PM


Google News
ராமநாதபுரம் : செய்திதாள்களை படிக்கும் பழக்த்தை ஏற்படுத்தி கொண்டால், எதிர்காலம் சிறப்பாக அமையும், என கலெக்டர் அருண்ராய் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்திய நூலகர் தின விழாவில் கலெக்டர் அருண்ராய் தலைமையில் வகித்து பேசியதாவது: சீயாழி ராமாமிர்த அரங்கநாதன் நூலகத்துறைக்கு தன்னை அர்பணித்து கொண்டவர். இதனால்தான் இவரை நூலக தந்தை என்று போற்றுகிறோம். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது செய்தித்தாள்களை படிக்க வேண்டும். அப்போதுதான், உங்களது எதிர்காலம் சிறப்பாக அமையும். என்னுடைய முன்னேற்றத்துக்கு நூலகம் மிகுந்த அளவில் பயனளித்தது, என்றார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட நூலகர் பழனிச்சாமி, மைய நூலகர் நித்தியானந்தம் பங்கேற்றனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us