அ.தி.மு.க.,வில் ஐக்கியமான பா.ம.க., நிர்வாகிகள்
அ.தி.மு.க.,வில் ஐக்கியமான பா.ம.க., நிர்வாகிகள்
அ.தி.மு.க.,வில் ஐக்கியமான பா.ம.க., நிர்வாகிகள்
ADDED : ஆக 13, 2011 04:38 PM
ராமநாதபுரம்: அ.தி.மு.க.,வில் ராமநாதபுரம் பா.ம.க., மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் மூன்று ஒன்றிய செயலாளர்கள் இணைந்தனர்.ராமநாதபுரத்தில் ஜெ., பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது பா.ம.க., மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் அழகேசன் (ராமநாதபுரம்), திரவியபாண்டியன் (கடலாடி), முத்து மணி(திருப்புல்லாணி) உட்பட 500க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆனிமுத்து தலைமையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.இது குறித்து சுப்பிரமணியன் கூறியதாவது: பா.ம.க.,வில் பணியாற்றுபவர்கள் பெயருக்கு மட்டுமே பொறுப்பில் உள்ளனர். மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில்லை. வடமாவட்டங்களில் மட்டுமே, பா.ம.க., தலைமையில் உள்ளவர்கள் கவனம் செலுத்துகின்றனர். தெற்கே உள்ளவர்களை கண்டு கொள்வதில்லை. தற்போதைய அரசுக்கு மக்களின் ஆதரவு உள்ளது. எனவே கட்சி பணியாற்ற உகந்த கட்சி அ.தி.மு.க.,தான், என்றார்.