/உள்ளூர் செய்திகள்/சேலம்/சட்ட கல்லூரி மாணவர்கள்சாலை மறியல் வழக்கில் கைதுசட்ட கல்லூரி மாணவர்கள்சாலை மறியல் வழக்கில் கைது
சட்ட கல்லூரி மாணவர்கள்சாலை மறியல் வழக்கில் கைது
சட்ட கல்லூரி மாணவர்கள்சாலை மறியல் வழக்கில் கைது
சட்ட கல்லூரி மாணவர்கள்சாலை மறியல் வழக்கில் கைது
ADDED : அக் 05, 2011 02:27 AM
சேலம்: பண்ருட்டியை சேர்ந்த ராமச்சந்திரன்(25), கள்ளக்குறிச்சியை சேர்ந்த
ரஞ்சித்குமார்(26) ஆகிய இருவரும், சேலம் மத்திய சட்டக்கல்லூரியில்,
மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
சேலம் அரசு கல்லூரி விடுதி காப்பாளர்
மற்றும் ஆறு மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சாலை
மறியல் செய்தது தொடர்பாக ரஞ்சித்குமார், ராமச்சந்திரன் ஆகிய இருவர் மீது
போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், அவர்கள் இருவரையும்
போலீஸார் கைது செய்து, சேலம் ஜே.எம்., எண்:3 நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் முரளிதரன், சாலை மறியல் செய்த வழக்கில்
ராமச்சந்திரன், ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் சிறையில் அடைக்க
உத்தரவிட்டார்.


