/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மடத்துக்குளத்தில் எஸ்.ஐ., பணியிடம் காலி :வழக்குகள் தேக்கம்மடத்துக்குளத்தில் எஸ்.ஐ., பணியிடம் காலி :வழக்குகள் தேக்கம்
மடத்துக்குளத்தில் எஸ்.ஐ., பணியிடம் காலி :வழக்குகள் தேக்கம்
மடத்துக்குளத்தில் எஸ்.ஐ., பணியிடம் காலி :வழக்குகள் தேக்கம்
மடத்துக்குளத்தில் எஸ்.ஐ., பணியிடம் காலி :வழக்குகள் தேக்கம்
ADDED : செப் 21, 2011 12:03 AM
மடத்துக்குளம் : சப்-இன்ஸ்பெக்டர் பணியிடம் நிரப்பபடாமல் உள்ளதால்
மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.
மடத்துக்குளம்
ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களும்,
சிற்றூர்களும் உள்ளன. இந்த பகுதியில் நடக்கும் குற்றங்கள், திருட்டு
மற்றும் சட்ட விரோதமான சம்பவங்கள் குறித்து கண்காணிக்க கணியூரை மையமாக
வைத்து அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. மடத்துக்குளத்துக்கு தெற்கு
பகுதியிலுள்ள கொழுமம், குமரலிங்கம், சங்கராம நல்லூர், பாப்பான்குளம் ஆகிய
பகுதிகளில் நடக்கும் சட்ட விரோதமான செயல்கள் குறித்து கண்காணிக்க
குமரலிங்கம் அவுட் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. இரண்டும் மடத்துக்குளம் போலீஸ்
ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இரண்டுக்கும் இடையே 15 கி.மீ.,
தூரம் உள்ளதால் குமரலிங்கம் அவுட் ஸ்டேஷனுக்கு தனியாக எஸ்.ஐ பணியில்
நியமிக்கப்பட்டுள்ளார். மடத்துக்குளம் பகுதியிலிருந்து வடக்கு மற்றும்
மேற்கு பகுதிகள் மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ கட்டுப்பாட்டில்
இருக்கும். மடத்துக்குளம் ஸ்டேஷனில் தற்போது எஸ்.ஐ பணியிடம் கடந்த சில
மாதங்களாக காலியாக இருப்பதால் மடத்துக்குளத்துக்கு வடக்கு மற்றும் மேற்கு
பகுதியில் வழக்கு மற்றும் ரோந்து பணிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் கடத்தூர்
பகுதியில் சட்டத்துக்கு புறம்பான செயல்கள் நடக்க தொடங்கியுள்ளது. 20
க்கும் மேற்பட்ட போலீசாருக்கு ஒரு இன்ஸ்பெக்டர் மட்டும் தற்போது
பணியிலுள்ளார். இதனால் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படாமல் திணறி
வருகின்றனர். போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடும் நிலையில் இது போல்
காரியங்கள் அதிகளவு நடக்காமல் தடுக்கப்பட்டு வந்தது. தற்போது
எஸ்.ஐ.,பணியிடம் காலியாக இருக்கும் நிலையில் போலீசாரின் நடவடிக்கைகள்
தேக்கமடைந்துள்ளன.இது குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு
மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எஸ.ஐ.,நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.