Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கையில் சைக்கிள் போட்டி : தேர்வால் மாணவர்கள் புறக்கணிப்பு

சிவகங்கையில் சைக்கிள் போட்டி : தேர்வால் மாணவர்கள் புறக்கணிப்பு

சிவகங்கையில் சைக்கிள் போட்டி : தேர்வால் மாணவர்கள் புறக்கணிப்பு

சிவகங்கையில் சைக்கிள் போட்டி : தேர்வால் மாணவர்கள் புறக்கணிப்பு

ADDED : செப் 24, 2011 09:59 PM


Google News

சிவகங்கை : அண்ணாத்துரை பிறந்த நாள் விளையாட்டு விழா சைக்கிள் போட்டி, காலாண்டு தேர்வன்று நடந்ததால், மாணவர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

அண்ணாத்துரை பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கையில் 13, 15, 17 வயது பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டிகள் நேற்று (சனி) மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. ஆண்டுதோறும் 150 க்கும்மேற்பட்டவர்கள் பங்கேற்கும் இப்போட்டியில், நேற்று மாணவர்கள் பிரிவில் 25 பேரும், ஒரே ஒரு மாணவியும் மட்டுமே கலந்து கொண்டனர். ஏராளமான மாணவர்களுக்கு பங்கேற்க ஆர்வமிருந்தும் தேர்வன்று போட்டி நடந்ததால் பங்கேற்க இயலவில்லை.

ஆசிரியர் ஒருவர் கூறுகையில், மற்ற மாவட்டங்களில் அண்ணாத்துரை பிறந்த நாளான செப்.,15 ல் போட்டி நடத்தி முடித்து விட்டனர். சிவகங்கையில் மட்டும் நேற்று ஆங்கிலம் முதல்தாள் தேர்வன்று போட்டி நடத்தப்பட்டது. விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், தேர்வு என்பதால், பல மாணவர்கள் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டு விட்டது,'' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us