/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: அ.தி.மு.க., கவுன்சிலர் பிடிவாதம்தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: அ.தி.மு.க., கவுன்சிலர் பிடிவாதம்
தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: அ.தி.மு.க., கவுன்சிலர் பிடிவாதம்
தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: அ.தி.மு.க., கவுன்சிலர் பிடிவாதம்
தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: அ.தி.மு.க., கவுன்சிலர் பிடிவாதம்
ADDED : ஜூலை 29, 2011 11:16 PM
ஊட்டி : உதகை நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது.நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டம் துவங்கியதும், பல கவுன்சிலர்கள் 'வார்டு திட்ட பணிகள் குறித்து உடனடியாக டெண்டர் விட வேண்டும்,' என கூறினர். 'ரீ-டெண்டர் விட 15 நாட்கள் ஆகும்' என தலைவர் தெரிவித்தார். இதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், துணை தலைவர் ரவிக்குமார் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் 'சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்,' எனக்கூறி, நகர் மன்ற கூட்டத்தை புறகணித்து வெளியேறினர். இதன்பின், அ.தி.மு.க., கவுன்சிலர் இம்தியாஸ், 'மாநில முதல்வர் படத்தை மன்ற கூட்ட அறையில் வைக்க வேண்டும்,' என தெரிவித்து தரையில் அமர்ந்தார் . தொடர்ந்து, 'சபை மரபை மீறுவதாக கூறி, இம்தியாசை நகர மன்ற நேற்றைய கூட்டத்தில் இருந்து தலைவர் 'சஸ்பெண்ட்' செய்தார். எனினும், கவுன்சிலர் தரையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தார்.
இதனை பார்த்த மன்ற தலைவர், 'இத்துடன் நகர மன்ற கூட்டம் முடிந்தது,' என அறிவித்து, மன்ற அறையில் இருந்து சென்றார். பின்பு நகர் மன்ற ஊழியர்களை அழைத்து, 'கவுன்சிலர் இம்தியாசை வெளியேற்றவும்,' உத்தரவிட்டார். ஆனால், ஊழியர்களால் அவரை வெளியேற்ற முடியவில்லை. இதையடுத்து கூட்ட அரங்கில் யாரும் இல்லாத போது, முதல்வர் ஜெயலலிதா போட்டோவை இம்தியாஸ் மன்ற சுவரில் மாட்டினார். அப்போது, அ.தி.மு.க.,வினர் சிலர் அங்கு வந்தனர். 'நகர மன்ற தலைவர் அறையில் உள்ள முன்னாள் எம்.பி., பிரபுவின் படத்தை எடுக்க வேண்டும்,' என சிலர் கூறினர். அதற்குள் தனது அறையை பூட்டிவிட்டு தனது வாகனத்தில் ராஜேந்திரன் சென்றார். இதனால், சிறிது நேரத்திலேயே சில பரபரப்புகளுடன் கூட்டம் முடிந்தது.