ADDED : செப் 04, 2011 11:07 PM
கடலூர் : கடலூரில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அத்தப்பூ கோலம் போடப்பட்டது.
கேரளாவில் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகை 10 நாட்கள் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த 31ம் தேதி துவங்கியது. வரும் 9ம் தேதி வரை விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு கடலூரில் உள்ள கேரள கலாசார சபை அலுவலகத்தில் கேரள பெண்கள் நேற்று அத்தப்பூ கோலமிட்டு, பல வகையான பூக்களை வைத்தனர். ஏற்பாடுகளை சபை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.