நெல்லை மேயர்: தே.மு.தி.க., அணியில் குழப்பம்
நெல்லை மேயர்: தே.மு.தி.க., அணியில் குழப்பம்
நெல்லை மேயர்: தே.மு.தி.க., அணியில் குழப்பம்
ADDED : செப் 29, 2011 02:09 PM
திருநெல்வேலி: நெல்லை மேயர் தேர்தலில், தே.மு.தி.க., அணியில் வேட்பாளர் யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.
நெல்லை மாநகராட்சிக்கு மேயர் வேட்பாளராக தே.மு.தி.க., வைச் சேர்ந்த சீதா லட்சுமி என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தே.மு.தி.க., அணியில் இ.கம்யூ., மற்றும் மா.கம்யூ., கட்சிகள் இணைந்ததால், நெல்லை மாநகராட்சி இ.கம்யூ., கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், நெல்லையில் தங்களுக்கு போதுமான பலம் இல்லை எனக்கூறி அங்கு போட்டியிட இ.கம்யூ., மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அறிவிக்கப்பட்ட தே.மு.தி.க., வேட்பாளரும் போட்டியிட மறுக்கவே, தற்போது மாற்று வேட்பாளரை தேடும் பணி நடந்து வருகிறது. இதே நிலையே, காங்கிரஸ் தரப்பிலும் நிலவி வருகிறது.