/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பண்பொழி பகுதியில் 2 வாட்டர் டேங்க் அமைக்க நடவடிக்கை : அமைச்சர் தகவல்பண்பொழி பகுதியில் 2 வாட்டர் டேங்க் அமைக்க நடவடிக்கை : அமைச்சர் தகவல்
பண்பொழி பகுதியில் 2 வாட்டர் டேங்க் அமைக்க நடவடிக்கை : அமைச்சர் தகவல்
பண்பொழி பகுதியில் 2 வாட்டர் டேங்க் அமைக்க நடவடிக்கை : அமைச்சர் தகவல்
பண்பொழி பகுதியில் 2 வாட்டர் டேங்க் அமைக்க நடவடிக்கை : அமைச்சர் தகவல்
செங்கோட்டை : பண்பொழி டவுன் பஞ்., பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு வாட்டர் டேங்குகள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக பண்பொழி அதிமுக செயலாளர் பரமசிவன் பண்பொழியில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்கும், கரிசல்குடியிருப்பில் 1 லட்சம் லிட்டர் வாட்டர் டேங்கும் அமைத்து தரவும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு நிதி திட்டத்தில் இதற்கான பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டுமென அமைச்சர் செந்தூர்பாண்டியனிடம் மனு அளித்தார். இதனை தொடர்ந்து பண்பொழி டவுன் பஞ்., மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் பண்பொழி, கரிசல்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இரண்டு வாட்டர் டேங்குகள் அமைத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்திருப்பதாகவும், இதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் செந்தூர்பாண்டியன் உறுதியளித்துள்ளார்.