Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தேர்தல் பாதுகாப்புக்கு போலீஸில் தனி பிரிவு

தேர்தல் பாதுகாப்புக்கு போலீஸில் தனி பிரிவு

தேர்தல் பாதுகாப்புக்கு போலீஸில் தனி பிரிவு

தேர்தல் பாதுகாப்புக்கு போலீஸில் தனி பிரிவு

ADDED : செப் 28, 2011 11:34 PM


Google News

தர்மபுரி : உள்ளாட்சி தேர்தலையொட்டி, மாவட்டம் முழுவதும் உள்ள ஓட்டு சாவடிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும், கண்காணிக்கவும் போலீஸ் துறையில் தனி பிரிவு ஏற்படுத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17,19 ஆகிய இரு தினங்களில் நடக்கிறது. இதனையொட்டி, மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு சாவடிகளுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் தனி பிரிவு துவக்கப்படவுள்ளது. இந்த பிரிவில் ஒரு டி.எஸ்.பி., தலைமையில் இன்ஸ்பெக்டர், மூன்று எஸ்.ஐ.,க்கள் மற்றும் ஐந்து போலீஸார் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் மாவட்டம் முழுவதும், தேர்தல் தொடர்பான விபரங்கள், பதட்டமான ஓட்டு சாவடிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார யுக்திகள் குறித்து கண்காணிக்கவுள்ளனர். மேலும், தேர்தல் பிரச்சனை தொடர்பான புகார்களை பதிவு செய்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கவுள்ளனர். பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு ஆகிய தாலுக்காவில் பதட்டமான ஓட்டு சாவடிகள் அதிகம் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உளவு பிரிவு போலீஸார் கடந்த நான்கு தினங்களாக இப்பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us