Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

PUBLISHED ON : ஜூலை 27, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேட்டி:காங்கிரஸ் கட்சியை அழிக்கப் போவதாக சீமான் கூறுகிறார்.காங்கிரஸ் வலுவான இயக்கம்; அதை யாராலும் அழிக்க முடியாது. நாங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத்தான் எதிர்க்கிறோம்; தமிழர்களுக்கு எதிராக செயல்படவில்லை; ஈழத் தமிழர்களை அழிப்பதற்கு காங்கிரஸ் துணை போகவில்லை.

இ.கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன் அறிக்கை: இலங்கையில் கடைசியாக நடைபெற்ற போரில், 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது ஒரு அப்பட்டமான இன அழிப்பு போர்க் குற்றம். உலக அளவில் பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், இந்தியா மட்டும் மவுனம் சாதிக்கிறது; இது, பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இதை, இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வியாக இந்திய கம்யூனிஸ்ட் கருதுகிறது.

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர்அய்யர் பேச்சு: காங்கிரஸ் கட்சி என்பது சர்க்கஸ் போன்றது; தன் நிலையை முன்னேற்றிக் கொள்ள விரும்பும் ஒவ்வொரு தொண்டனும் இந்த சர்க்கசில் பங்கேற்றாக வேண்டும்.

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சேமநாராயணன் அறிக்கை: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் மண்பாண்டத் தொழிலையும், அத்தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில், மாவட்டந்தோறும் நவீன தொழிற்பயிற்சிக் கூடங்கள் கட்டித்தரப்படும், செங்கல் செய்ய களிமண் எடுக்கும் பிரச்னையை களைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கோரிக்கைகளையும், பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவித்து, மண்பாண்டத் தொழிலாளர்களின் வயிற்றில் பால்வார்க்க வேண்டும்.

எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராஜா பேட்டி: மருத்துவர்கள் தங்கள் தொழிலை, சேவையாக செய்து பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் தங்களை புகழும் வண்ணம், சிறப்பான சேவையை மக்களுக்கு அளிக்க வேண்டும். பல வருடங்களுக்கு முன், ஒரு மனிதனின் சராசரி வயது, 37ல் இருந்து, இன்று, 65 ஆக உயர்ந்துள்ளது; அந்த அளவிற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் வந்துள்ளன.

தமிழக வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிக்கை: எந்தத் துறையில் அன்னிய முதலீடு வந்தாலும், அது நாட்டைக் கொள்ளையடிக்கவே என்பதை அனைவரும் உணர வேண்டும். அன்னிய ஆதிக்கத்திற்கு வழி ஏற்படுத்தித் தரும் ஆட்சியாளர்களின் முயற்சியை முறியடிக்க வேண்டும்; தேவைப்பட்டால், அன்னியர்களுக்கு துணை போகும் ஆட்சியாளர்களையே முறியடிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us