காஷ்மீரில் பதுங்கி இருக்கும் லஷ்கர்இ தொய்பாக்கள் இந்தியாவில் தாக்குதல் சதி:சொல்வது அமெரிக்கா
காஷ்மீரில் பதுங்கி இருக்கும் லஷ்கர்இ தொய்பாக்கள் இந்தியாவில் தாக்குதல் சதி:சொல்வது அமெரிக்கா
காஷ்மீரில் பதுங்கி இருக்கும் லஷ்கர்இ தொய்பாக்கள் இந்தியாவில் தாக்குதல் சதி:சொல்வது அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியாவில் வரும் காலத்தில் தாக்குதல் நடத்தி நாட்டின் அமைதியை சீர்குலையச்செய்ய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உலகளாவிய பயங்கரவாதம் தொடர்பான ரிப்போர்ட்டில் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மே<லும் இந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் நல்ல தஞ்சம் கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: முக்கியத்துவம் பெறும் பயங்கரவாதிகள் அமைப்பான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷி இ முகம்மது, ஹர்கத் <அல் முஜாகிதீன், ஆகிய அமைப்புகள் காஷ்மீரில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகளுக்கென நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்தும் சக்தி கொண்ட ஆர்வலர்கள் தயார் செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் மருத்துவ கிளினிக் : காஷ்மீரை மையமாக வைத்து கடந்த 2001 முதல் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக செயல்பட துவங்கியது. பிராந்திய அளவில் பெரும் இடையூறை தந்திருக்கிறது இந்த அமைப்பு, அத்துடன் இந்த அமைப்பின் உண்மையான நபர்கள் பலம் அறிய முடியவில்லை என்றாலும், ஆயிரக்கணக்கானவர்கள் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, மற்றும் பாக்., பஞ்சாப் மாநிலம், காஷ்மீர், மற்றும் தோடா பகுதியில் உள்ளனர். அதிகம்பட்சம் ஆப்கன் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தான் பிரதானம். துப்பாக்கி, கடின மற்றும் இலகுரக மிஷின்கன்கள், பீரங்கிகள், ராக்கெட் உள்ளிட்ட தளவாடங்கள் கொண்டுள்ளனர். லஷ்கர் இ தொய்பாவுக்கென பாகிஸ்தானில் பள்ளிகள், பயிற்சிமையங்கள், மற்றும் மருத்துவ கிளினிக் ஆகியன செயல்பட்டு வருகிறது. தெற்காசியாவில் இந்த அமைப்பு பலமாக கால் ஊன்றியிருக்கிறது என்றும் அந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.