/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கிராமத்தில் முகாமிட்டுள்ள யானைகள் :வனத்துக்குள் விரட்ட வேண்டுகோள்கிராமத்தில் முகாமிட்டுள்ள யானைகள் :வனத்துக்குள் விரட்ட வேண்டுகோள்
கிராமத்தில் முகாமிட்டுள்ள யானைகள் :வனத்துக்குள் விரட்ட வேண்டுகோள்
கிராமத்தில் முகாமிட்டுள்ள யானைகள் :வனத்துக்குள் விரட்ட வேண்டுகோள்
கிராமத்தில் முகாமிட்டுள்ள யானைகள் :வனத்துக்குள் விரட்ட வேண்டுகோள்
ADDED : ஜூலை 13, 2011 01:50 AM
பந்தலூர் : 'பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது. மழவன் சேரம்பாடி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாலை 6 மணிக்கு 3 யானைகள் கொண்ட கூட்டம் குடியிருப்புகளை ஒட்டிய வனப்பகுதிக்கு வந்து, இரவில் விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
இதனால் தங்களின் அவசர தேவைகளுக்கு வெளியில் செல்ல முடியாமலும், இரவில் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இப்பகுதி மாணவ, மாணவியரும் கல்வி நிலையங்களுக்கு சென்று வரும் வரை பெற்றோர் மிகுந்த அச்சத்துடன் அமர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டி, சேரம்பாடி வனத்துறைக்கு தொடர்ந்து தகவல் கொடுத்தும் வனத்துறையினர் கண்டுக்கொள்ள வில்லை. எனவே, இங்குள்ள யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.