ADDED : ஜூலை 27, 2011 01:24 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கைப்பந்துக் கழக பேரவைக் கூட்டம், ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிடத்தில் நடந்தது.
சங்கத் தலைவர் நல்லுசாமி தலைமை வகித்தார்.
பேரவைக் கூட்ட பார்வையாளர்கள் முன்னிலை வகித்தனர். பேரவையின் மாநில பார்வையாளர்களான திருச்சி மாவட்டத் தலைவர் தங்கம்பிச்சையப்பா, திண்டுக்கல் ஜெகநாதன், சென்னை ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று கூட்ட நிகழ்வுகள் குறித்து பாராட்டி, மாவட்ட கழகம் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு குறித்து விளக்கிப் பேசினர்.கூட்டத்தில், பலர் கலந்துகொண்டனர்.