/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குறுந்தொழிலுக்கு உதவ தடையற்ற மின்சாரம் :"டாக்ட்' சங்கம் வலியுறுத்தல்குறுந்தொழிலுக்கு உதவ தடையற்ற மின்சாரம் :"டாக்ட்' சங்கம் வலியுறுத்தல்
குறுந்தொழிலுக்கு உதவ தடையற்ற மின்சாரம் :"டாக்ட்' சங்கம் வலியுறுத்தல்
குறுந்தொழிலுக்கு உதவ தடையற்ற மின்சாரம் :"டாக்ட்' சங்கம் வலியுறுத்தல்
குறுந்தொழிலுக்கு உதவ தடையற்ற மின்சாரம் :"டாக்ட்' சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஆக 11, 2011 11:22 PM
கோவை : 'கோவை உட்பட தமிழகத்தில் குறுந்தொழில் அதிகளவில் இயங்கும் பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிடும் வகையில் நடவடிக்கை எடுத்து, காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பாலமாக இருந்து செயல்படும் தமிழக அரசுக்கு 'டாக்ட்' நன்றி தெரிவிக்கிறது. தமிழக முதல்வரின் அறிவிப்பால், பெரும் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு, குறு சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கோவை உட்பட தமிழகத்தில் குறுந்தொழில் அதிகளவில் இயங்கும் பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் இரண்டு மணி நேரம் மின்நிறுத்தம் செய்வதை தவிர்த்து, தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.