/உள்ளூர் செய்திகள்/சென்னை/டாஸ்மாக் கடையில் ரூ.2.8 லட்சம் திருட்டுடாஸ்மாக் கடையில் ரூ.2.8 லட்சம் திருட்டு
டாஸ்மாக் கடையில் ரூ.2.8 லட்சம் திருட்டு
டாஸ்மாக் கடையில் ரூ.2.8 லட்சம் திருட்டு
டாஸ்மாக் கடையில் ரூ.2.8 லட்சம் திருட்டு
ADDED : அக் 07, 2011 12:55 AM
திருநீர்மலை : திருநீர்மலை அருகே சென்னை பை-பாஸ் சர்வீஸ் சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில், ஷட்டரை உடைத்து அதிலிருந்த 2.8 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருநீர்மலை அருகே சென்னை பை-பாஸ் சர்வீஸ் சாலையில், டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இங்கு தாம்பரத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், 35, என்பவர் கண்காணிப்பாளராகவும், ஜெகதீசன், 32, என்பவர் விற்பனையாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு விற்பனை முடிந்ததும், ஜெய்சங்கர், ஜெகதீசன் இருவரும் கடையை மூடிவிட்டு சென்றனர். பின்னர் நேற்று காலை 10 மணிக்கு கடை திறக்க வந்தனர். அப்போது, கடையின் வெளிபக்க ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்த போது, லாக்கர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 2.8 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், உயர்ரக சரக்கு பாட்டில்களையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஜெய்சங்கர் கொடுத்த புகாரின்படி, சங்கர்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


