/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இரண்டாவது நாளாக தொடரும் விசைத்தறியாளர் உண்ணாவிரதம்இரண்டாவது நாளாக தொடரும் விசைத்தறியாளர் உண்ணாவிரதம்
இரண்டாவது நாளாக தொடரும் விசைத்தறியாளர் உண்ணாவிரதம்
இரண்டாவது நாளாக தொடரும் விசைத்தறியாளர் உண்ணாவிரதம்
இரண்டாவது நாளாக தொடரும் விசைத்தறியாளர் உண்ணாவிரதம்
ADDED : செப் 25, 2011 01:20 AM
சூலூர் :சோமனூர், சூலூரில் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம், இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சோமனூர், தெக்கலூர், அவினாசி, பல்லடம் மற்றும் சூலூரில் தொடர் உண்ணாவிரதம் நேற்று முன்தினம் துவங்கியது.
சோமனூர் மற்றும் சூலூரில் இரண்டாவது நாளாக நேற்றும், 500க்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர். இப்பிரச்னையில் அரசு தலையிட்டு, கூலி உயர்வு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உண்ணாவிரதத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பேசினர்.சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்முடி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநகர தலைவர் தங்கராஜ், மாவட்ட தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்து பேசினர்.