ADDED : ஜூலை 26, 2011 09:51 PM
தளவாய்புரம்:தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஹேண்ட்பால் போட்டி நடந்தது.10அணிகள் கலந்து கொண்டன.
மாவட்ட செயலளர் சரவணபிரகாஷ் முன்னிலையில் பள்ளி செயலாளர் பழனிச்சாமி போட்டிகளை துவக்கி வைத்தார்.முதலிடத்தை சிவகாசி ஒய்.ஆர். டி.வி மெட்ரிக்., பள்ளி, இரண்டாமிடத்தை சிவகாசி வினாயகா மெட்ரிக்., பள்ளிகள் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பொம்மிஸ் நிர்வாக இயக்குனர் இனிகோ இன்பராஜ் பரிசுகள் வழங்கினார். முன்னாள் தலைமை ஆசிரியர் அருள் ஜெகநாதன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.