/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விளம்பர போர்டுகளால் விபத்து தேவை நடவடிக்கைவிளம்பர போர்டுகளால் விபத்து தேவை நடவடிக்கை
விளம்பர போர்டுகளால் விபத்து தேவை நடவடிக்கை
விளம்பர போர்டுகளால் விபத்து தேவை நடவடிக்கை
விளம்பர போர்டுகளால் விபத்து தேவை நடவடிக்கை
ADDED : ஜூலை 26, 2011 09:47 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர போர்டுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.அரசியல் கட்சிகள், தனியார், சங்கங்கள், கல்லூரிகள் போன்றவைகள் தங்களது பெயர் பொறித்த விளம்பர பிளக்ஸ் போர்டுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட், தேரடி, ராமகிருஷ்ணாபுரம், சர்ச் சந்திப்புகளில் வைக்கின்றனர்.
இவ்வாறு வைக்கப்படும் போர்டுகளால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதில் சர்ச் ரோடு சந்திப்பில் பஸ் ஸ்டாண்ட் செல்லும் வளைவில் வைக்கப்பட்ட போர்டுகள்,முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாதபடி மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் தொடர் விபத்து ஏற்படுகிறது. தற்போது ஆண்டாள் கோயில் திருவிழா நடந்து வரும் நிலையில், பஸ் ஸ்டாண்டிலிருந்து கோயில் செல்லும் வழியில் பல்வேறு இயக்கங்களின் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளி மாநில பயணிகள் திணறும் நிலை உள்ளது. இதன் மீது நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள போர்டுகளை அகற்ற முன் வர வேண்டும்.