/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு மருத்துவமனையில் சட்ட உதவி முகாம்அரசு மருத்துவமனையில் சட்ட உதவி முகாம்
அரசு மருத்துவமனையில் சட்ட உதவி முகாம்
அரசு மருத்துவமனையில் சட்ட உதவி முகாம்
அரசு மருத்துவமனையில் சட்ட உதவி முகாம்
ADDED : ஜூலை 26, 2011 09:42 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில் பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி பேசியதாவது:
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகில் இலவச சட்ட உதவி மையம் அமைந்துள்ளது. ஆனால், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி மக்கள் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். மக்கள் வட்ட சட்ட பணிக்குழுவில் மனுக்களை தாக்கல் செய்து கொள்ளலாம். அரசு மருத்துவமனை போலவே இந்த சேவையும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஐக்கோர்ட், சுப்ரீம் கோர்ட்களில் வழங்கும் தீர்ப்புகளை காட்டிலும் மக்களுக்காக வட்ட சட்ட பணிக்குழு சார்பில் வழங்கும் தீர்ப்பே இறுதியாக கருதப்படுகிறது. எனவே, மக்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் போது தங்கள் ரேஷன் கார்டை கொண்டு வர வேண்டும். முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் இதை கொண்டு வர வேண்டும். இதனால், மருத்துவமனையில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறவும் மற்ற தேவைகளுக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்றார். பொள்ளாச்சி சார்பு நீதிபதி குருமூர்த்தி தலைமை வகித்து பேசுகையில்,'மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் காரணமாக மக்கள் சட்டத்தை தேடி செல்கின்றனர். இது போன்ற மையங்களில் விசாரிக்கப்படும் வழங்குகளால், இரண்டு தரப்பினருக்கும் சாதகமாக வெற்றித்தர கூடிய தீர்ப்பாக அமையும். அதனால், மக்கள் இது போன்று இலவச மையங்களை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம், என்றார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன், குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் கண்ணன் பொள்ளாச்சி வட்ட சட்டப் பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.