Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பாம்பு படக்கண்காட்சிமாணவர்களுக்கு சலுகை கட்டணம்

பாம்பு படக்கண்காட்சிமாணவர்களுக்கு சலுகை கட்டணம்

பாம்பு படக்கண்காட்சிமாணவர்களுக்கு சலுகை கட்டணம்

பாம்பு படக்கண்காட்சிமாணவர்களுக்கு சலுகை கட்டணம்

ADDED : ஆக 01, 2011 02:40 AM


Google News
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்காவில், அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அருங்காட்சியத்துறை சார்பில், தமிழகம் முழுவதுமாக பாம்பு படக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன்படி, ஈரோடு அருங்காட்சியகத்தில், கடந்த 28 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரையில் இக்கண்காட்சி நடக்கிறது.உலகில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையிலான பாம்பு இனங்கள் காணப்படுகிறது. இந்தியாவில் 1,200 வகையான பாம்பு இனங்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பாம்பு இனங்களை பற்றி தெரிந்து கொள்ள அருங்காட்சியகம் சார்பில், அரிய வகை பாம்புகளின் புகைப்படங்கள் கொண்ட கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் கோவையில் நடத்தப்பட்டது. தற்போது, ஈரோட்டில் நடக்கிறது. வெளிநாடுகளில் உள்ள, அனகோண்டா வகை மற்றும் மஞ்சள் நாகம், பாலை வனங்களில் காணப்படும் கொடிய விஷம் கொண்ட பாம்புகளின் படங்களும், அதன் விபரங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.''மாணவர்கள் பொது அறிவை வளர்க்கும் விதமாக இக்கண்காட்சி நடக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, கட்டண சலுகை வழங்கப்படும்'' என, காப்பாச்சியர் (பொறுப்பு) முல்லைஅரசு தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us