/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி, 3 பேர் காயம்கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி, 3 பேர் காயம்
கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி, 3 பேர் காயம்
கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி, 3 பேர் காயம்
கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி, 3 பேர் காயம்
கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் டிரைவர் பலியானார்.
அப்போது கார் கோவில்பட்டியை கடந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தபோது இடைசெவல் அருகில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் கார் டிரைவரான நல்லூர் ஞானராஜ் மகன் ஜேக்கப்(40) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் வந்த வில்சன் சத்தியராஜ், டேவிட் டேனியல், ஸ்டாலின் ஆகிய மூவரும் காயமடைந்தனர். இவ்விபத்து குறித்து தகவலறிந்த நாலாட்டின்புதூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகவும், பலியான டிரைவர் ஜேக்கப் உடலை பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஸ்டாலின் நாலாட்டின்புதூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார் வழக்கு பதிவு செய்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சங்கர் விசாரணை நடத்தி வருகிறார்.