ADDED : ஜூலை 28, 2011 12:47 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகர காங்., நிர்வாகிகள் கூட்டம், நகர தலைவர் ரவி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், 'வரும் ஆக., 15ம் தேதி பொள்ளாச்சியில் அனைத்து வார்டுகளிலும் தேசியக்கொடியேற்றி, சுதந்திரதின விழாவை கொண்டாட வேண்டும். சுப்ரீம்கோர்ட் தீர்ப்புப்படி தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தாவிட்டால் வரும் ஆக., 9ல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு மிக உயரிய விருது வழங்கும் வங்காளதேச அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.dinakalar coimbatore news


