/உள்ளூர் செய்திகள்/தேனி/உயிர் உர உற்பத்தி மையம் துவக்கப்படாத அவலம் இரண்டு ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லைஉயிர் உர உற்பத்தி மையம் துவக்கப்படாத அவலம் இரண்டு ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை
உயிர் உர உற்பத்தி மையம் துவக்கப்படாத அவலம் இரண்டு ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை
உயிர் உர உற்பத்தி மையம் துவக்கப்படாத அவலம் இரண்டு ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை
உயிர் உர உற்பத்தி மையம் துவக்கப்படாத அவலம் இரண்டு ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை
ADDED : ஆக 09, 2011 01:25 AM
கம்பம் : ஒருகோடி ரூபாய் மதிப்பீட்டில், உயிர் உரங்கள் உற்பத்தி செய்யும் மையத்தை துவக்க, தமிழக அரசு அனுமதி அளித்து இரண்டு ஆண்டுகளாகியும், இன்னும் துவக்கப்படவில்லை.
நெல், நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களுக்கு தழைச்சத்து, மணிச்சத்து வழங்கும் உயிர் உரங்கள் விவசாயத்துறை மூலம் வழங்கப்படுகிறது. ஒரு பாக்கெட் 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பாஸ்போபாக்டீரியா, அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் ஆகிய உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த உயிர் உர உற்பத்தி மையங்கள் திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புதிதாக 9 இடங்களில், உயிர் உர உற்பத்தி மையங்களை துவக்க அரசு அனுமதி அளித்தது.அதில், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஒரு கோடி ரூபாயில், அமைக்க அனுமதி கிடைத்தது.
உத்தமபாளையம் விவசாய உதவி இயக்குனர் அலுவலகத்தில் உற்பத்தி மையம் துவக்க முடிவு செய்யப்பட்டது.
இதனால், அங்கு செயல்பட்டு வந்த உதவி இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு மாற்றப்பட்டது. அதே நேரம், உயிர் உரம் உற்பத்தி செய்வதற்கான மையம் அமைக்கும் பணிகள் துவக்கப்படவில்லை. அரசு அனுமதி வழங்கி 2 ஆண்டுகளை கடந்தும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. கருவிகள், லேப் உபகரணங்கள், அலுவலர் நியமனம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதே காரணம் என கூறப்படுகிறது. தற்போது இரண்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கருவிகளும் வந்துள்ளதால், விரைவில் உயிர் உரங்கள் உற்பத்தி துவங்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.


