/உள்ளூர் செய்திகள்/சேலம்/இன்று புரட்டாசி மாதம் பிறப்பு கோவில்களில் சிறப்பு பூஜைஇன்று புரட்டாசி மாதம் பிறப்பு கோவில்களில் சிறப்பு பூஜை
இன்று புரட்டாசி மாதம் பிறப்பு கோவில்களில் சிறப்பு பூஜை
இன்று புரட்டாசி மாதம் பிறப்பு கோவில்களில் சிறப்பு பூஜை
இன்று புரட்டாசி மாதம் பிறப்பு கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : செப் 18, 2011 01:12 AM
சேலம்: பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும், புரட்டாசி மாதம் இன்று பிறப்பதை முன்னிட்டு, சேலத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இன்று துவங்கி, 31 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புரட்டாசி மாதத்தின் முதல் நாளான இன்று, சேலம், செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பெருமாள் கோவில்களில் இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், தோமாலை சேவை, அர்ச்சனை, சாத்து முறை மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும், சன்னதி உள் புறப்பாடும் ஆகியன நடக்கிறது.
* செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வேங்கடாசலபதி கோவில், பட்டை கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில், நெத்திமேடு கரிய பெருமாள் கோவில், அம்மாபேட்டை சௌந்தரராஜப் பெருமாள் கோவில், அன்னதானப்பட்டி காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில், உடையாப்பட்டி கரிய பெருமாள் கோவில், அயோத்தியாப்பட்டணம் கோதண்ட ராமஸ்வாமி கோவில், சின்னத்திருப்பதி வரதராஜபெருமாள் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
* சேலம், பொன்னம்மாபேட்டை வாசக சாலைத் தெருவில், வெங்கடாஜலபதி அலமேலு மங்கை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
* தாரமங்கலம் அருகே உள்ள கசுவரரெட்டிப்பட்டி கரிய பெருமாள் கோவிலில் இன்று காலையில், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.


