/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/காப்பகங்களில் வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கைகாப்பகங்களில் வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை
காப்பகங்களில் வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை
காப்பகங்களில் வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை
காப்பகங்களில் வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை
ADDED : செப் 04, 2011 09:45 PM
திண்டுக்கல்:தமிழகத்தில் தொண்டு நிறுவனங்கள் மூலம் காப்பகங்கள்
நடத்துபவர்கள், அடிப்படை வசதிகள் செய்து பராமரிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசிடம் நிதியை வாங்கி செலவழிக்கும் தொண்டு நிறுவனங்கள் பல, உரிய முறையில்
பராமரிப்பு இல்லாமலும், பெறப்படும் நிதிகளுக்கு கணக்கு காட்டாமலும் உள்ளன.
இதையடுத்து குழந்தைகள், பெண்கள், ஆதரவற்றோர், முதியோர், எய்ட்ஸ் நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பகங்கள் நடத்துபவர்கள் உடனடியாக கழிப்பறை
உட்பட அடிப்படை வசதிகளை செய்யவேண்டும். காப்பகங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு
செய்யவேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது.
தொண்டு நிறுவனங்கள் மூலம்
நடத்தப்படும் காப்பகங்களை இரவு நேரத்திலும் சென்று ஆய்வு நடத்தவும்,
பெண்கள் காப்பகங்களை தொடர்ந்து கண்காணிக்கவும் மாவட்ட சமூகநல
அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு வழங்கும் நிதிக்கான கணக்குகளை
உரிய ஆவணங்கள் மூலம் பராமரிக்கிறார்களா என ஆய்வு நடத்தி அறிக்கை தரவும்,
மீறும் தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்
உத்தரவிடப்பட்டுள்ளது.


