/உள்ளூர் செய்திகள்/தேனி/காஞ்சாரை நோய் தாக்குதலால் பாதிப்பு : வாழை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வுகாஞ்சாரை நோய் தாக்குதலால் பாதிப்பு : வாழை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு
காஞ்சாரை நோய் தாக்குதலால் பாதிப்பு : வாழை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு
காஞ்சாரை நோய் தாக்குதலால் பாதிப்பு : வாழை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு
காஞ்சாரை நோய் தாக்குதலால் பாதிப்பு : வாழை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு
ADDED : ஜூலை 11, 2011 10:58 PM
தேனி : காஞ்சாரை நோய் தாக்குதல் காரணமாக தேனி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து திருச்சியை சேர்ந்த வாழை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.
தேனி மாவட்டத்தில் ஏழு ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பகலில் கடும் வெயிலுடன் கூடிய வறட்சி, இரவில் ஈரப்பதம் நிறைந்த காற்றுடன் கூடிய குளிச்சி ஆகிய மாறுபட்ட சீதோஷ்ண நிலை காரணமாக வாழையில் காஞ்சாரை நோய் தாக்கி உள்ளது.
ஆய்வு: தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய நோயியல்துறை விஞ்ஞானி தங்கவேல், நூற்புழுவியல்துறை விஞ்ஞானி சுந்தர்ராஜ் ஆகியோர் கொண்ட குழு தேனி மாவட்டத்தில் ஆய்வு நடத்தியது. தோட்டக்கலை துணை இயக்குனர் முருகன் உட்பட அதிகாரிகள் உடன் சென்றனர்.
ஆலோசனை: நோய் தாக்கிய வாழை இலைகளை வெட்டி அகற்றி அழித்து விட வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி., பனோல் ஆயில் (பெட்ரோலியத்தில் இருந்து எடுக்கப்படும் ஆயில்), கார்பன்டையாசின் அரை கிராம் அல்லது மேங்கோசெப் 1.25 கிராம், அல்லது காப்பர்ஆக்ஸி குளோரைடு ஒரு கிராம், 5 மி.லி., ஒட்டும் பசை கலந்து 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.