/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/இந்தியன் வங்கி கடன் 3.89 லட்சம் வசூலானதுஇந்தியன் வங்கி கடன் 3.89 லட்சம் வசூலானது
இந்தியன் வங்கி கடன் 3.89 லட்சம் வசூலானது
இந்தியன் வங்கி கடன் 3.89 லட்சம் வசூலானது
இந்தியன் வங்கி கடன் 3.89 லட்சம் வசூலானது
ADDED : செப் 11, 2011 10:58 PM
செஞ்சி : செஞ்சியில் நடந்த மக்கள் நீதி மன்றத்தில் இந்தியன் வங்கிக்கடன் 3.89 லட்சம் ரூபாய் வசூலானது.
செஞ்சி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் நேற்று செஞ்சி சார்பு நீதி மன்றத்தில் மக்கள் நீதி மன்றம் கூடியது. செஞ்சி, அனந்தபுரம், வல்லம், மேல்மலையனூர், மழவந்தாங்கல் இந்தியன் வங்கி கிளைகளில் நிலுவையில் உள்ள நீண்ட நாள் கடன்கள் பரிசீலிக்கப்பட்டன. ஓய்வு பெற்ற நீதிபதிகள் கிருஷ்ணன், குணசீலன், சட்டப்பணிகள் குழு உறுப் பினர்கள் அரிதாஸ், பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர்கள் மணிவண்ணன், ராஜாராம் வழக்குகளை விசாரித்தனர்.
இதில் 46 நபர்களின் கடன்களுக்காக 52.54 லட்சம் ரூபாய் இறுதி முடிவானது. இதில் 3.89 லட்சம் ரூபாய் உடனடியாக வசூலானது. இதில் இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் சாந்தா, முதுநிலை மேலா ளர் ராஜன், கிளை மேலா ளர் செஞ்சி அரிநாதன், மேல் மலையனூர் ஜோதி மணி, அனந்தபுரம் சுரேஷ், வல்லம் மோகன், சட்டப்பணிகள் குழு அலுவலர்கள் அண்ணாமலை, ரமேஷ் கலந்து கொண்டனர்.