/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கரும்பு விவசாயிகள் சங்க சிறப்பு பேரவை கூட்டம்கரும்பு விவசாயிகள் சங்க சிறப்பு பேரவை கூட்டம்
கரும்பு விவசாயிகள் சங்க சிறப்பு பேரவை கூட்டம்
கரும்பு விவசாயிகள் சங்க சிறப்பு பேரவை கூட்டம்
கரும்பு விவசாயிகள் சங்க சிறப்பு பேரவை கூட்டம்
ADDED : ஆக 29, 2011 10:25 PM
செஞ்சி : சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
செஞ்சி தாலுகா செம்மேட்டில் உள்ள ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க சிறப்பு பேரவை கூட்டம் செஞ்சியில் நடந்தது. வசுபாலன் தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் ராதாகிருஷ்ணன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் சிறப்புரை நிகழ்த்தினர். ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்திற்கான வட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. சிறப்பு தலைவராக மாதவன், தலைவராக குண்டு ரெட்டியார், செயலராக கணபதி, பொருளராக அந்தாரி, துணைத்தலைவர்களாக வீராசாமி, வசுபாலன், ஜோலாதாஸ், ரவிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கரும்பு வெட்டு முடிந்த ஒரு வாரத்தில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய வேண் டும். கரும்பு சாகுபடிக்கு உரம், பூச்சி கொல்லி மருந்து ஆகியவற்றை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.