Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி சிறையில் டி.ஐ.ஜி.,க்கள் அதிரடி : சோதனையில் சிக்கிய "மொபைல்ஃபோன்'

திருச்சி சிறையில் டி.ஐ.ஜி.,க்கள் அதிரடி : சோதனையில் சிக்கிய "மொபைல்ஃபோன்'

திருச்சி சிறையில் டி.ஐ.ஜி.,க்கள் அதிரடி : சோதனையில் சிக்கிய "மொபைல்ஃபோன்'

திருச்சி சிறையில் டி.ஐ.ஜி.,க்கள் அதிரடி : சோதனையில் சிக்கிய "மொபைல்ஃபோன்'

ADDED : ஆக 21, 2011 02:12 AM


Google News

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் மத்திய மண்டலம் மற்றும் சிறைத்துறை டி.ஐ.ஜி.,க்கள் நடத்திய திடீர் சோதனையில் மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 'மொபைல்ஃபோன்' சிக்கியது.

திருச்சி மத்திய சிறையில் மொபைல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் புழங்குவதாக அடிக்கடி புகார் எழுவது வாடிக்கையாகி விட்டது. அவ்வப்போது நடக்கும் சோதனையில் கைதிகளிடமிருந்து 'சிம்' கார்டு, மொபைல்ஃபோன், கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. திருச்சி மத்திய சிறையில் 11 பிளாக்குகள் உள்ளன. இவற்றில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது, நில மோசடி வழக்கில் சிக்கிய தி.மு.க., பிரமுகர்கள் காஜாமலை விஜய், மதுரையை சேர்ந்த 'அட்டாக்' பாண்டி, குடமுருட்டி ஆறுமுகம், எஸ்ஸார் கோபி, கரூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரவிகுமார், முருகேசன் உள்ளிட்ட பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



இதனால், திருச்சி மத்திய சிறைக்குள் தடை செய்யப்பட்ட மொபைல்ஃபோன் புழக்கம் தாராளமாகி இருப்பதாக புகார்கள் குவிந்தன. இதையடுத்து, மத்திய மண்டல டி.ஐ.ஜி., அமல்ராஜ், சிறைத்துறை டி.ஐ.ஜி., மற்றும் கண்காணிப்பாளர் (பொறுப்பு) துரைசாமி, எஸ்.பி., லலிதாலட்சுமி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜெயபாண்டியன் தலைமையில் 130க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று காலை 10.30 மணியளவில் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு மற்றும் மோப்பநாய் படைப்பிரிவும் ஈடுபடுத்தப்பட்டன. இதில், கழிவறைக்கு செல்லும் வழியில் மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 'மொபைல்ஃபோன்' ஒன்று சிக்கியது.



இதுகுறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி., துரைசாமி கூறுகையில், ''ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சோதனை நடத்துவது வழக்கமான ஒன்று. சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு தற்போது சோனை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த கைதிகளில் யாரோ ஒருவன் புதைத்து வைத்த பழைய மொபைல்ஃபோன் ஒன்று கைப்பற்றப்பட்டது. மற்றபடி வேறு எதுவும் சிக்கவில்லை,'' என்றார். திருச்சி மத்திய சிறையில் தி.மு.க., பிரமுகர்கள் பலர் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிறையிலிருந்து மொபைல்ஃபோன் கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us