Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தி.கோடு புது பஸ் ஸ்டாண்டில் மழைநீர் வடிகால் குழாய் பழுது: பயணிகள் அவதி

தி.கோடு புது பஸ் ஸ்டாண்டில் மழைநீர் வடிகால் குழாய் பழுது: பயணிகள் அவதி

தி.கோடு புது பஸ் ஸ்டாண்டில் மழைநீர் வடிகால் குழாய் பழுது: பயணிகள் அவதி

தி.கோடு புது பஸ் ஸ்டாண்டில் மழைநீர் வடிகால் குழாய் பழுது: பயணிகள் அவதி

ADDED : செப் 18, 2011 01:08 AM


Google News

திருச்செங்கோடு: திருச்செங்கோடு புது பஸ் ஸ்டாண்டில், மழைநீர் வடிகால் குழாய்கள் உடைந்துள்ளதால், மழை பெய்யும்போது, பயணிகள் நிற்கும் இடத்தில் மழைநீர் புகுந்து சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.

அதனால், பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். திருச்செங்கோடு, பள்ளி, கல்லூரிகள், லாரி, ரிக், விசைத்தறி என பலவிதமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. அதனால், புது பஸ் ஸ்டாண்டில், வெளி மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த ஆயிக்கணக்கான மக்கள், தினமும் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.



ஈரோடு, நாமக்கல், சங்ககிரி, சேலம், கரூர் என பக்கத்து மாவட்டங்களை இணைக்கும் நகரமாகவும் திருச்செங்கோடு விளங்குகிறது. சென்னை, கோவை, திருச்சி, புதுக்கோட்டை, கும்பகோணம் என, தொலைதூர பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படுகிறது. இரவு, பகல் எந்நேரமும் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருப்பதால், திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்ட் பரபரப்பாக காணப்படும். திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும்போது, அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால் குழாய் அமைக்கப்பட்டது. அந்த மழைநீர் வடிகால் குழாய்கள், தற்போது உடைப்பு ஏற்பட்டு, பயணிகள் நிற்கும் இடத்தில் மழைநீர் புகுந்து சேறும் சகதியுமாக உள்ளது. அதனால், நிற்பதற்கு இடமில்லாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். 'மழைக்காலம் துவங்க உள்ள நிலையில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில், உடைப்புகளை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us