ADDED : ஆக 22, 2011 11:05 PM
வால்பாறை : வால்பாறையில் ஆளுநர் விருதுக்கான சாரண, சாரணியர் தேர்வு நடைபெற்றது.
வால்பாறையில் ஆண்டு தோறும் சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆளுநர் விருது வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் 13 பள்ளிகளை சேர்ந்த 163 மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வினை மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜா தலைமையில் மாநில அமைப்பு ஆணையாளர் நாராயணசாமி துவக்கி வைத்தார். தேர்வு செய்யப்பட்ட சாரண, சாரணியர்கள் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு, ஆளுநர் விருது வழங்கப்படும் என்று பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.