/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/நிலத்தடிநீர் உறிஞ்சுவதை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சைக்கிள் பேரணிநிலத்தடிநீர் உறிஞ்சுவதை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சைக்கிள் பேரணி
நிலத்தடிநீர் உறிஞ்சுவதை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சைக்கிள் பேரணி
நிலத்தடிநீர் உறிஞ்சுவதை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சைக்கிள் பேரணி
நிலத்தடிநீர் உறிஞ்சுவதை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சைக்கிள் பேரணி
ADDED : ஆக 17, 2011 02:34 AM
ஓட்டப்பிடாரம் : ஓட்டப்பிடாரத்தில் நிலத்தடிநீர் உறிஞ்சுவதை கண்டித்து திங்கள்கிழமையன்று புதிய தமிழகம் கட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
ஓட்டப்பிடாரம் வட்டத்தில் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், பெரியநத்தம், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், கவர்னகிரி போன்ற இடங்களில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தரப்பில் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே புதிய தமிழகம் கட்சித் தலைவரும், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ., கிருஷ்ணசாமி நிலத்தடிநீர் உறிஞ்சப்படுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சைக்கிள் பேரணி நடத்தவுள்ளதாக அறிவித்தார். இதனையடுத்து சைக்கிள் பேரணி புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலை வழியாக பெரியநத்தம் கிராமம் வரை நடந்தது. பேரணிக்கு மாவட்ட செயலர் கனகராஜ் தலைமை வகித்தார். தென்மண்டல செயலர் பட்டவராயன், மாநில விவசாய அணி செயலர் கருப்பசாமி ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர். மாவட்ட துணைச் செயலர் முருகன் நிலத்தடிநீர் பாதிப்பு குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலர் மனோகரன், ஒன்றிய இணைச் செயலர் முனியசாமி, மாவட்ட இணைச் செயலர் கண்ணன், மாவட்ட தொண்டரணியைச் சேர்ந்த சுடலைமணி உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


