ஆதாரமின்றி வழக்கு பதிவு ஐகோர்ட் கிளை கேள்வி
ஆதாரமின்றி வழக்கு பதிவு ஐகோர்ட் கிளை கேள்வி
ஆதாரமின்றி வழக்கு பதிவு ஐகோர்ட் கிளை கேள்வி
ADDED : செப் 21, 2011 01:07 AM
மதுரை: தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாலகுருசாமி.
போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்று மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் முன்ஜாமின் கோரி பாலகுருசாமி ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். மனு நீதிபதி ஆர்.மாலா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வக்கீல், ''போலீசாருக்கு எதிராக மனுதாரர் ஏற்கனவே புகார் செய்ததால், வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் ஜாமினில் வந்தால், மேலும் வழக்கு பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்,'' என்றார். மனுதாரர் மீதான புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆதாரமின்றி வழக்கு பதிவு செய்தால் போலீசார் மீது எப்படி நம்பிக்கை ஏற்படும் எனவும் நீதிபதி கூறினார். பின், மனுதாரருக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிபதி, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடையவும் உத்தரவிட்டார்.