/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/போக்குவரத்தை ஒழுங்குபடுத்த "ஹைடெக்' வசதிபோக்குவரத்தை ஒழுங்குபடுத்த "ஹைடெக்' வசதி
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த "ஹைடெக்' வசதி
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த "ஹைடெக்' வசதி
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த "ஹைடெக்' வசதி
ADDED : ஆக 11, 2011 04:49 AM
குன்னூர்:குன்னூரில் வாகன நெரிசல், ஜன நடமாட்டத்தை ஒழுங்குப்படுத்தும்
போக்குவரத்து போலீசாரின் பணியை சுலபமாக்க 'கார்ட்லெஸ் மற்றும் காலர்மைக்'
வழங்கப்பட்டுள்ளது.குன்னூர் பஸ் ஸ்டாண்ட் நகரில் ஏற்படும் போக்குவரத்து
நெரிசலை கட்டுப்படுத்த, ஒரே இடத்தில் நின்று ஒலி பெருக்கி மூலம் பணி
செய்வதை காட்டிலும் நெரிசல் ஏற்படும் இடத்திற்கே சென்று 'மைக்' மூலம்
போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி,
குன்னூர் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று, குன்னூர் வியாபாரிகள் சங்கம்
சார்பில், 3,000 ரூபாய் மதிப்புள்ள கார்டுலெஸ் மற்றும் காலர் மைக்
வழங்கப்பட்டுள்ளது.
குன்னூர் வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலர்
ரகீம் ஆகியோர் உபகரணங்களை வழங்க, குன்னூர் டி.எஸ்.பி., மாடசாமி,
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அய்யர்சாமி பெற்றுக் கொண்டனர்.