/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை சரிவு மழையால் தடைபட்டது உற்பத்திவெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை சரிவு மழையால் தடைபட்டது உற்பத்தி
வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை சரிவு மழையால் தடைபட்டது உற்பத்தி
வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை சரிவு மழையால் தடைபட்டது உற்பத்தி
வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை சரிவு மழையால் தடைபட்டது உற்பத்தி
ADDED : ஆக 14, 2011 02:36 AM
பொள்ளாச்சி : வெளிமார்க்கெட்டில், கொப்பரை கிலோவுக்கு மூன்று ரூபாய் விலை
சரிவு ஏற்பட்டுள்ளது.காங்கேயம் மார்க்கெட்டில், 6ம் தேதி நிலவரப் படி,
கொப்பரை கிலோவுக்கு 63 - 64 ரூபாய், தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு
1,450, தேங்காய் பவுடர் கிலோவுக்கு 100 விலை கிடைத்தது. விவசாயிகள் சொந்தப்
பொறுப்பில் பறித்து உரித்த தேங்காய் டன்னுக்கு 17 ஆயிரத்து 500 முதல் 18
ஆயிரத்து 500, காய்ந்த தேங்காய் டன்னுக்கு 19 ஆயிரத்து 500 கிடைத்தது.
பொள்ளாச்சி, உடுமலைப் பகுதிகளில் இருந்து சென்னை உட்பட பிற பகுதிகளுக்கு,
உணவுத் தேவைக்காக அனுப்பப்படும் தேங்காய் டன்னுக்கு 17 ஆயிரம் கிடைத்தது.
விவசாயிகள் பறித்து இருப்பு வைத்துள்ள தேங்காய்க்கு 10 - 11, வியாபாரிகள்
சொந்தப் பொறுப்பில் பறித்துக் கொள்ள 9- 10 ரூபாய் கிடைத்தது. நேற்றைய
நிலவரப் படி, கொப்பரை கிலோவுக்கு 61 ரூபாய் கிடைத்தது. தேங்காய் எண்ணெய் 15
கிலோ டின்னுக்கு 1,350, தேங்காய் பவுடர் கிலோவுக்கு 98 ரூபாய்
நிர்ணயிக்கப்பட்டது. விவசாயிகள் பறித்து உரித்த தேங்காய் டன்னுக்கு 17
ஆயிரம் முதல் 18 ஆயிரத்து 500 வரை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் இருந்து
சென்னை உட்பட பகுதிகளுக்கு அனுப்பும் தேங்காய் டன்னுக்கு 16 ஆயிரம்
கிடைத்தது.
விவசாயிகள் சொந்தப் பொறுப்பில் இருப்பில் பறித்து இருப்பு
வைத்திருக்கும் தேங்காய்க்கு 11, வியாபாரிகள் பறித்துக் கொள்ள தேங்காய்க்கு
10 ரூபாய் வழங்கப்பட்டது. கொப்பரை உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'கடந்த
இரு வாரங்களாக, கொப்பரை விலை ஒரே நிலையில் இருந்தது. இந்த வாரம் தொடர்ந்து
மழை பெய்ததால், உற்பத்தி தடைபட்டுள்ளது. இருப்பினும், கொப்பரையில் ஈரப்பதம்
அதிகம் உள்ளதால் விலை சரிந்துள்ளது. கொப்பரை கிலோவுக்கு மூன்று ரூபாயும்,
தேங்காய் எண்ணெய் டின்னுக்கு 100 ரூபாயும் விலை
சரிந்துள்ளது' என்றனர்.