Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கசிவுநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தல்

கசிவுநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தல்

கசிவுநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தல்

கசிவுநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தல்

ADDED : ஆக 05, 2011 02:05 AM


Google News
கோபிசெட்டிபாளையம்: கீழ்பவானி பாசனத் திட்டத்தில் 34 கசிவு நீர் திட்டங்களுக்கு, பராமரிப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, கீழ்பவானி முறை நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு கோரியுள்ளது.

பொதுப்பணித்துறை அமைச்சருக்கு, இக்கூட்டமைப்பு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசனத் திட்டத்தில் 34 கசிவு நீர் அணைக்கட்டுகள் மூலம் 17 ஆயிரத்து 339 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அணைக்கட்டு வரும் நீர் ஆதாரம் கீழ்பவானி பாசன பகுதிகளில் பாசனம் பெறும்போது கசிவு நீர் மூலம் பாசனம் பெறுகிறது. தற்போதுள்ள கசிவு நீர் அணைக்கட்டுகள் பாசன வாய்க்கால்கள் அனைத்தும் பொதுப்பணி துறை நீர்வள ஆதார அமைப்பின் கட்டுபாட்டில் தான் இயக்கப்படுகிறது. ஆனால், அவ்வவ்போது பாசன விவசாயிகள்தான் வாய்க்கால் தூர் வாரும் பணிகளை செய்கின்றனர். கசிவு நீர் அணைக்கட்டுகள் கட்டி 35 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், பாசனம் பெற்று வந்தாலும், ஆக்கிரமிப்பு காரணமாகவும், பொதுப்பணி துறை மூலம் பராமரிப்பு நிதி ஒதுக்கப்படாத நிலையில், கசிவு நீர் திட்டங்களில் முழுமையாக நீர் பாய்ச்ச முடியாமல், கடைமடை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசனம் பாதிக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி திட்டப் பகுதியில் இருந்து பாயும் நீர் ரத்து செய்யப்பட்டதாலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு பொதுப்பணி துறை மூலம் கசிவு நீர் அணைக்கட்டு மற்றும் வாய்க்கால் பகுதிகளில் எல்லைகளை குறித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பல ஆண்டுகளாக தூர்வரப்படாமல் பராமரிப்பின்றி உள்ளதை ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us