ஐகோர்ட் கிளையில் ஜான்பாண்டியன் மனு
ஐகோர்ட் கிளையில் ஜான்பாண்டியன் மனு
ஐகோர்ட் கிளையில் ஜான்பாண்டியன் மனு
ADDED : செப் 17, 2011 01:01 AM
மதுரை: பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறும் வகையில் ராமநாதபுரத்திற்கு செல்ல அனுமதிக்க கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன், மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்தார்.
மனுவில் அவர் கூறியுள்ளதாவது: இமானுவேல் சேகரன் நினைவு நாளில் ஒவ்வொரு கட்சிக்கும் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பகல் 3.00 முதல் மாலை 5.00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது. அதில் பங்கேற்கச் சென்ற என்னை, வல்லநாடு அருகே போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து, அமைதியான முறையில் போராடிய கட்சியினர் மீது பரமக்குடியில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஆறு பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்ல முயன்றேன். ஆனால், 144 தடையுத்தரவை காரணம் காட்டி எனக்கு அனுமதி மறுக்கின்றனர். அங்கு செல்ல என்னை தடுக்கக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.