ADDED : செப் 20, 2011 01:00 AM
கோவை : கேரளாவில் நேற்று நடந்த 'பந்த்' காரணமாக, பஸ் போக்குவரத்து
ஸ்தம்பித்தது; பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
மத்திய அரசு கடந்த வாரத்தில்
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.14 உயர்த்தியது. இதற்கு, பா.ஜ.,
கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மத்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளாவில் நேற்று
ஒரு நாள் 'பந்த்' நடத்த இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இதன்
காரணமாக, கேரளாவில் நேற்று பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. தமிழகத்தில்
இருந்தும், கேரளாவுக்கான பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தமிழக
பஸ்கள் அனைத்தும், கேரள எல்லையான வாளையார் வரை சென்று திரும்பின. இதனால்
பயணிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகினர். கோவையில் இருந்து கேரளாவுக்கு
சரக்கு ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டிய லாரிகளும், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.


