/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ருச்சி தி.மு.க., "மாஜி'க்கு "டிபாஸிட்' காலிருச்சி தி.மு.க., "மாஜி'க்கு "டிபாஸிட்' காலி
ருச்சி தி.மு.க., "மாஜி'க்கு "டிபாஸிட்' காலி
ருச்சி தி.மு.க., "மாஜி'க்கு "டிபாஸிட்' காலி
ருச்சி தி.மு.க., "மாஜி'க்கு "டிபாஸிட்' காலி
ADDED : செப் 27, 2011 11:43 PM
திருச்சி: திருச்சி மேற்குத்தொகுதி இடைத்தேர்தல் குறித்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், 'தி.மு.க., சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நேரு 'டிபாஸிட்' இழப்பார்' என்று அமைச்சர்கள் பேசினர்.
திருச்சி மேற்குத்தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று திருச்சி ரோஷன் மஹாலில் நடந்தது. கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சிவபதி தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச்செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான மனோகரன் வரவேற்றார். இடைத்தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள ஆறு அமைச்சர்கள் பங்கேற்றனர். வேட்பாளர் பரஞ்ஜோதி, அணிச்செயலாளர்கள் சீனிவாசன், தமிழரசி, பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள், தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, 'டிபாஸிட்' இழப்பார் என்றனர். வீட்டுவசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது: தொகுதியில் 2 லட்சத்து 46 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். பூத் கமிட்டி உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியலை கையில் எடுத்துக் கொண்டு, வீடு, வீடாக சென்று, ஊரில் இருப்பவர்கள், வெளியூரில் இருப்பவர்கள், இறந்து போனவர்கள் குறித்து ஒருவாரத்துக்குள் கண்டறிய வேண்டும். ஆட்சியேற்ற 100 நாளில் செய்த 100 ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். தி.மு.க., ஆளுங்கட்சியாக இருந்தபோது பஸ்ஸில் ஐந்தரை கோடி ரூபாய் பணத்தை எடுத்து வந்து தேர்தல் வேலை செய்தனர். தற்போது, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்தாவது தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்று நேரு நினைப்பார். திருச்சி மட்டுமல்லாது தமிழகத்திலே மிகப்பெரிய பணக்காரர்களாக நேரு குடும்பத்தினர் இருக்கின்றனர். இதுகுறித்து பொதுக்கூட்டம், ஆலோசனைக் கூட்டத்தில் பேசாமல், வீடு, வீடாகச் சென்று, நேருவின் சுயரூபம் மக்கள் மனதில் பதியும் வண்ணம் எடுத்துச் சொல்ல வேண்டும். நமது வெற்றி உறுதி. 25 ஆயிரம் ஓட்டுக்கள் கூட பெற முடியாத நிலையில் நேரு 'டிபாஸிட்' இழப்பது உறுதி. இவ்வாறு அவர் பேசினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பேசுகையில், ''பரஞ்ஜோதியை மலைக்கோட்டையில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒற்றுமையாக பணியாற்றினால் நம்மை வெல்ல எந்த கொம்பனாலும் முடியாது. இடைத்தேர்தலில் நேரு டிபாஸிட் இழப்பார்,'' என்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா பேசுகையில், ''அ.தி.மு.க.,வுக்குதான் ஓட்டு போடணும் என்று வாக்காளர்கள் முடிவு செய்து விட்டனர். அராஜகம் நடக்காமல் நாம் பார்த்து கொண்டாலே போதும். வெற்றி முக்கியமல்ல. ஓட்டு வித்தியாசம் முக்கியம். மறைந்த அமைச்சர் மரியம்பிச்சையின் ஆத்மா சாந்தியடைய, இடைத்தேர்தலில் பரஞ்ஜோதியை வெற்றியடைய செய்ய வேண்டும்,'' என்றார். போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், ''கடந்த சட்டசபை தேர்தலில் 110 ஓட்டுச்சாவடிகளில் தி.மு.க., அதிக ஓட்டுகள் வாங்கியுள்ளனர். இந்த முறை 240 ஓட்டுச்சாவடிகளிலும் அ.தி.மு.க., அதிக ஓட்டு வாங்க ஒற்றுமையாக பாடுபடவேண்டும். நமக்கு வெற்றி உறுதி. ஓட்டு வித்தியாசம்தான் முக்கியம்,'' என்றார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயக்குமார் பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சிக்கு நல்லாட்சி சான்றிதழ் வழங்கும் வகையில் இடைத்தேர்தல் முடிவுகள் இருக்க வேண்டும். தமிழகத்தில் அழகிரி, கருணாநிதி பார்முலா இனிமேல் கிடையாது. 'அம்மா' பார்முலா மட்டும்தான். வரலாறு காணாத இடைத்தேர்தல் வெற்றியை பெற வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத நிலையில் தி.மு.க., உள்ளது. வேட்பு மனுவை வாபஸ் வாங்கி விடலாமா? என்று எதிர்தரப்பில் பேசுவதாக தகவல் கிடைத்துள்ளது,'' என்றார்.