/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மின் இணைப்பு பெயர் மாற்றணுமா? நாளை சிறப்பு முகாம்மின் இணைப்பு பெயர் மாற்றணுமா? நாளை சிறப்பு முகாம்
மின் இணைப்பு பெயர் மாற்றணுமா? நாளை சிறப்பு முகாம்
மின் இணைப்பு பெயர் மாற்றணுமா? நாளை சிறப்பு முகாம்
மின் இணைப்பு பெயர் மாற்றணுமா? நாளை சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 13, 2011 02:11 AM
கோவை : மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கான சிறப்பு முகாம்,
சீரநாயக்கன்பாளையம் அலுவலகத்தில் நாளை (14ம் தேதி) நடக்கிறது.
தமிழ்நாடு
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கோவை, சீரநாயக்கன்பாளையம்
செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் நாளை காலை 10.30 முதல் மாலை 4.00 மணி வரை
நடக்கும் இம்முகாமில், சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தின் பி.என்.
புதூர், பாரதியார் பல்கலை, கணுவாய், சோமையம்பாளையம், வேடபட்டி, கலிக்
கநாயக்கன்பாளையம், பேரூர், காளம்பாளையம், தேவராயபுரம், தொண்டாமுத்தூர்,
மாதம்பட்டி, ஆலாந்துறை (கிழக்கு மற்றும் மேற்கு) மின் வாரிய
அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் இணைப்புகளின் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
பெயர் மாற்றம் செய்ய விரும்பும் மின் நுகர்வோர் தாங்கள் கடைசியாக
செலுத்திய மின் கட்டண ரசீது, பத்திர நகல், சொத்து வரி, வாரிசு மற்றும்
உரிமைச்சான்றிதழ், இறப்பு சான்றிதழுடன் 200 ரூபாய் கட்டணம் செலுத்தி பெயர்
மாற்றம் செய்து கொள்ளலாம். ஒருவருக்கு மேற்பட்ட வாரிசுதாரர்கள் இருந்தால்
மற்றவர்களிடம் 20 ரூபாய் முத்திரைத்தாளில் காப்புறுதி பத்திரம் கையொப்பம்
பெற்று தரவேண்டும். நிலுவைத்தொகை செலுத்த வேண்டிய மின் இணைப்புகள் மற்றும்
கோர்ட் வழக்கில் நிலுவையில் உள்ள மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய
முடியாது.இத்தகவலை, சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் அப்துல்காதர்
தெரிவித்துள்ளார்.