/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குட்டையை எட்டிப்பார்க்காத அதிகாரிகள்குட்டையை எட்டிப்பார்க்காத அதிகாரிகள்
குட்டையை எட்டிப்பார்க்காத அதிகாரிகள்
குட்டையை எட்டிப்பார்க்காத அதிகாரிகள்
குட்டையை எட்டிப்பார்க்காத அதிகாரிகள்
ADDED : ஜூலை 25, 2011 09:23 PM
திருப்பூர் : தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், தொரவலூர் ஊராட்சியில் உள்ள குட்டையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் ஒன்றியம், தொரவலூர் ஊராட்சிக்கு உட்பட்டு 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன; 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஊராட்சி அலுவலகத்தின் தெற்குப்பகுதியில் தொரவலூர் குட்டை உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குட்டை, இதுவரை தூர்வாரப்படவில்லை. அருகில் உள்ள இடங்கள் கையகப்படுத்தப் பட்டு தார் ரோடு போடப்பட்டுள்ளது. குட்டை பகுதியில் சிலர் மலம் கழித்து அசுத்தம் செய்து வருகின்றனர். கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், '80 ஆண்டுகளுக்கு முன் இக்குட்டை உருவானது. சொக்கனூர், பட்டம்பாளையம், மேற்குப்பதி உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பெய்யும் மழைநீர், இக்குட்டையில் தேங்கும். நிலத்தடி நீர் மட்டம் வெகு வாக குறைந்ததால், தற்போது பெய்யும் மழை தோட்டங்களுக்கே போதுமானதாக உள்ளது. குட்டைக்கு தண்ணீர் வருவது வெகுவாக குறைந்து விட்டது,' என்கின்றனர்.