தீபாவளிக்கு பஸ்களில் முன்பதிவு துவக்கம்
தீபாவளிக்கு பஸ்களில் முன்பதிவு துவக்கம்
தீபாவளிக்கு பஸ்களில் முன்பதிவு துவக்கம்
தீபாவளி பண்டிகைக்கு, அரசு விரைவு பஸ்களில் பயணிப்பவர்களுக்காக, 30 நாட்களுக்கு முன், முன்பதிவு துவங்குகிறது.
இதன்படி, அடுத்த மாதம் 24ம் தேதி பயணம் செய்பவர்கள், இந்த மாதம் 25ம் தேதியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.இந்த முறை, பண்டிகை புதன் கிழமை வருவதால், இரண்டு நாட்களுக்கு முன்பாக (திங்கட்கிழமை) முன்பதிவு செய்பவர்களில் பலர், அதற்கு முன்பாக உள்ள விடுமுறை தினங்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளையும் பயன்படுத்திக் கொள்வர். இதனால், அடுத்த மாதம் 21ம் தேதியில் இருந்தே இம்முறை தீபாவளி பயணம் துவங்கிவிடும் நிலை உள்ளது. அதனால், இன்று மற்றும் நாளை முதலே தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு சூடுபிடிக்கத் தொடங்கிவிடும் என அதிகாரிகள் தரப்பில் கூறினர்.முன்பதிவு முடிந்த பின்னரே, கூடுதலாக எவ்வளவு சிறப்பு பஸ்களை இயக்குவது என்பது குறித்து திட்டமிடப்படும் என, போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.-எஸ்.விவேக்-