/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மக்கள் குறைதீர் கூட்டத்தில் கம்ப்யூட்டரில் ரேகை பதிவுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கம்ப்யூட்டரில் ரேகை பதிவு
மக்கள் குறைதீர் கூட்டத்தில் கம்ப்யூட்டரில் ரேகை பதிவு
மக்கள் குறைதீர் கூட்டத்தில் கம்ப்யூட்டரில் ரேகை பதிவு
மக்கள் குறைதீர் கூட்டத்தில் கம்ப்யூட்டரில் ரேகை பதிவு
ADDED : ஆக 17, 2011 02:56 AM
நாமக்கல்: மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிப்பவர்களின் விரல் ரேகையை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் முறையை, நாமக்கல் மாவட்ட கலெக்டர், அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும், வாரந்தோறும் திங்கள் கிழமை மாவட்ட கலெக்டர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடப்படுகிறது. கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை சம்மந்தமாக கலெக்டரிடம் நேரடியாக மனு அளிக்கப்படும். அந்த மனு மீது விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்.அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, ஒரே பிரச்னைக்காக பலமுறை மனு கொடுக்கும் பரிதாப நிலை நீடித்து வருகிறது. இதை தவிர்க்கும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் புதிய திட்டத்தை மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடக்கும் குறைதீர் கூட்டத்துக்கு மனு அளிக்க வருபவர்கள், அலுவலக தரைத்தளத்தில் உள்ள பிரிவில் மனுக்களை அளித்து, கம்ப்யூட்டர் மூலம் ஒப்புகைச் சீட்டு பெறும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. ஒப்புகைச் சீட்டு வழக்கும் இடத்தில் கலெக்டர் குமரகுருபரன் உத்தரவின் பேரில், விரல் ரேகை பதிவு செய்யும் இயந்திரம் வைக்கப்பட உள்ளது. மனு அளிப்பவர் ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொண்டு, இயந்திரத்தில் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். ஒரே பிரச்னைக்கு மீண்டும் மனு செய்தால், ஏற்கனவே அளித்த மனு விபரங்கள் தெரியவரும். அதை வைத்து, அவர் எதற்காக மீண்டும் மனு செய்கிறார். அம்மனு மீது அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கை எடுத்தனர் என, கலெக்டர் விசாரித்து அறிய முடியும். அதன்மூலம் மனு அளிப்பவர்களுக்கு, விரைந்து தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்தாவது: கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்ட மனு, சிறப்பு மனுநீதி நாள் முகாம் மனு மற்றும் முகாம் அலுவலகத்தில் பெறுப்படும் மனுக்கள் உள்ளிட்ட அனைத்தும் கம்யூட்டரில் பதிவு செய்து, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களின் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஒரே பிரச்னை சம்மந்தமாக மீண்டும் மனுக்கள் அளிக்கப்படுவதை தவிர்க்க, மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வருபவர்களிடம் ஒப்புகைச் சீட்டு பெறும் இடத்தில், விரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்பட உள்ளது. ஒப்புகைச் சீட்டு வழங்கும் பிரிவில் ஒரு கம்யூட்டரில் மட்டும் தற்போது விரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் மீதமுள்ள கம்ப்யூட்டரிலும் ரேகை பதிவு இயந்திரம் வைத்து, இத்திட்டம் நடமுறைப்படுத்தப்படும். தாலுகா அலுவலகத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் விவரமும் கம்ப்யூட்டரில் பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


