Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/"மாஜி' அமைச்சர் தயாநிதிக்கு சிறை "ரிஸர்வ்'நாஞ்சில்சம்பத் ஆவேச பேச்சு

"மாஜி' அமைச்சர் தயாநிதிக்கு சிறை "ரிஸர்வ்'நாஞ்சில்சம்பத் ஆவேச பேச்சு

"மாஜி' அமைச்சர் தயாநிதிக்கு சிறை "ரிஸர்வ்'நாஞ்சில்சம்பத் ஆவேச பேச்சு

"மாஜி' அமைச்சர் தயாநிதிக்கு சிறை "ரிஸர்வ்'நாஞ்சில்சம்பத் ஆவேச பேச்சு

ADDED : அக் 02, 2011 12:36 AM


Google News
ராசிபுரம்: ''ஒரு காலத்தில், கொள்கைக்காகவும், தமிழகத்தின் நலன்களுக்காகவும் சிறை சென்ற தி.மு.க.,வினர், இன்று குடும்பம் குடும்பமாக சிறைக்கு செல்கின்றனர். அடுத்து, தயாநிதிக்கு சிறை ரிஸர்வ் செய்யப்பட்டுள்ளது,''என, பொதுக்கூட்டத்தில், ம.தி.மு.க., கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.

ராசிபுரம் நகராட்சி சேர்மன் பதவிக்கு, ம.தி.மு.க., சார்பில், ஆடிட்டர் தங்கவேல் போட்டியிடுகிறார். மேலும், கவுன்சிலர் பதவிக்கு அக்கட்சி வேட்பாளர்கள், 17 பேர் போட்டியிடுகின்றனர்.அக்கட்சி சார்பில், பொதுக்கூட்டம், ராசிபுரத்தில் நடந்தது. நகரச் செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். மாணவரணி நிர்வாகி பாண்டியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, நகர அவைத் தலைவர் சுப்ரமணி, பொருளாளர் சுப்ரமணி, மாவட்ட பிரதிநிதி சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத், வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:தி.மு.க., அமைச்சர்கள், எதற்கு சிறை சென்றார்கள், கொள்கைக்காகவா இல்லை; கோடி கோடியாய் கொள்ளையடித்து, ஊரெங்கும் நிலங்களை அபகரித்ததால் சிறைக்கு சென்றார்கள். ஒரு காலத்தில், கொள்கைக்காகவும், தமிழகத்தின் பல்வேறு நலன்களுக்கும் சிறை சென்ற, தி.மு.க.,வினர், இன்று குடும்பம் குடும்பமாய் சிறையில் தள்ளப்படுகின்றனர்.அடுத்து, தயாநிதிக்கு சிறை ரிஸர்வ் செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க.,வுக்கு உழைத்து, போராட்டங்களில் உயிர் துறந்த தொண்டர்களின் குடும்பம், இன்று எந்த நிலையில் உள்ளது என, கருணாநிதிக்கு தெரியுமா, தனது மகள் கனிமொழி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் வாடுகிறார் என்பதற்காக, கவர்னர் பதவியை கேவலமாக பேசிய கருணாநிதி, இன்று கவர்னரிடமும், ஜனாதிபதியிடம் மனு கொடுக்கிறார். முல்லை பெரியாறு அணை உடைந்தால், இந்தியாவின் ஒருமைப்பாடு உடையும். ஓட்டுச்சாவடியில் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய, பணத்துக்கு விலை போகாதீர்கள்; நேர்மையானவருக்கு வாக்களியுங்கள்.இவ்வாறு பேசினார்.நிகழ்ச்சியில், கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us