/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாற்று திறனாளிகள் ஐந்து ஜோடிக்கு திருமணம்மாற்று திறனாளிகள் ஐந்து ஜோடிக்கு திருமணம்
மாற்று திறனாளிகள் ஐந்து ஜோடிக்கு திருமணம்
மாற்று திறனாளிகள் ஐந்து ஜோடிக்கு திருமணம்
மாற்று திறனாளிகள் ஐந்து ஜோடிக்கு திருமணம்
சேலம்: சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில், ஐந்து ஜோடி மாற்று திறனாளிகளுக்கு, நேற்று திருமணம் நடந்தது.சேலம் மாவட்ட மாற்று திறனாளர் நல்வாழ்வு சங்கம், சேலம் லவ்-ஓ நாகராஜன் அறக்கட்டளை மற்றும் சேலம் காஸ்மாஸ் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து, சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில், நேற்று ஐந்து ஜோடி மாற்று திறனாளிகளுக்கு திருமணம் செய்து வைத்தன.வாழப்பாடியை சேர்ந்த வேலுசாமி- அம்பிகா, வெண்ணந்தூரை சேர்ந்த முத்து- பேபி, ஆச்சாங்குட்டப்பட்டியை சேர்ந்த சக்தி- ரமணி, சுக்கம்பட்டியை சேர்ந்த ரமேஷ்- பரமேஸ்வரி, தாரமங்கலத்தை சேர்ந்த முருகேசன்- ஜீவா ஆகிய ஜோடிகளுக்கு, திருமண சீர்வரிசையாக, தலா 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.திருமண விழாவில், ஈரோடு அரிமா மாவட்ட ஆளுநர் சண்முகன், சேலம் மாவட்ட மாற்று திறனாளர் நல்வாழ்வு சங்க தலைவர் அத்தி அண்ணா, தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல்வாழ்வு சங்க தென்மண்டல தலைவர் பகீரத நாச்சியப்பன், சேலம் மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் நடராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு, திருமண ஜோடிகள் நன்றி தெரிவித்தனர்.